சமீபத்திய முடிவுகள்

மீடியா

April 20, 2018
சென்னை அணி சவாலற்ற போட்டியில் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர் வாட்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மற்ற வீரர்கள் கணிசமான…

April 20, 2018
3வது வெற்றியை பதுவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் !

ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 16 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கவீரர் க்றிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால், அந்த அணி 20ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193…

April 20, 2018
சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்

ஐ.பி.எல் தொடரின் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 11வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும், 2 ஆண்டுகள் தடை முடிந்த பிறகு, முதன் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளன. சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள்…

April 6, 2018
தோனியின் பத்மபூஷண் விருதை கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பத்ம விருதுகள் மத்திய அரசால் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. அதன்படி, 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, விழா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. இதில், இந்திய அணியின் கூல் கேப்டன் என்றழைக்கப்படும் தோனி ராணுவ சீருடையில் வந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-டம் பத்ம பூஷண் விருதை பெற்றுகொண்டார். அப்போது,…

April 6, 2018
குழந்தையுடன் விளையாடி குழந்தையாக மாறிய தல தோனி

ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது, குழந்தையுடன் விளையாடி தோனி குழந்தையாகவே மாறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக ட்ரெண்டானது. 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் ஏப்ரல் 7ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. 2ஆண்டு தடைக்கு பின் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக சொந்த மண்ணில் பயிற்சியை தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியை காண தினமும்…

April 6, 2018
வைரலாகும் முரளி விஜய் பிறந்தநாள் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருப்பவருமான தமிழக வீரர் முரளி விஜய்-க்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிறந்தநாள். இதனை சிஎஸ்கே அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

April 6, 2018
தமிழக வீரராக சிஎஸ்கே அணியில் இடம்பெறாதது வருத்தம் -வாஷிங்டன் சுந்தர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தான் இடம்பிடித்துள்ள பெங்களூரு அணிக்கு சிறப்பாக விளையாடுவேன் என தமிழக இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது. இதில், 2ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் இடம் பிடித்திருப்பதே நடப்பு தொடரில் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் அணிக்கான வீரர்களை ஏலம் எடுத்தது. இதில் தமிழக இளம்…

April 6, 2018
சிஎஸ்கே-வில் இடம்பெறாதது வருத்தம்-தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் ஏப்ரல் 7ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. 2ஆண்டு தடைக்கு பின் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன. தொடருக்கு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி உள்ளிட்ட…

April 6, 2018
சிஎஸ்கே-விற்கு திரும்பியது மகிழ்ச்சி-முரளி விஜய்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது என தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் கிரிக்கெட் தொடர் யாரும் கண்டு கொள்ளாதவாறு இருக்கும் என்றால் அது நிதர்சனமான உண்மை. கோடை விடுமுறையில் கிரிக்கெட் ரசிகர்களை ஆண்டுதோறும் கட்டிப்போட்டு வைக்கிறது ஐபிஎல் எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர். யார் கண் பட்டதோ, என்றவாறு 2 ஆண்டுகள் மஞ்சள் படைக்கு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டு தடைகளை தகர்த்தெறிந்து “திரும்ப வந்துட்டேன்னு…